மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
மட்டக்களப்பு, ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 70ஆவது வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது, கரடியனாறு சந்தியிலிருந்து அன்னையின் திருச்சொரூப பவனி இன்று(30) பிற்பகல் 4 மணியளவில் ஆலயத்தை வந்தடைந்துள்ளது.
கொடியேற்ற நிகழ்வு
அருட்தந்தை ஜெரிஸ்டன் வின்சன் தலைமையில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் என் சத்தியானந்தியின் பங்குபற்றலுடன் மாலை 5 மணியளவில் கொடியேற்றம் இடம்பெற்று முதலாம் நவநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 7ஆம் திகதி காலை 5மணிக்கு பாதயாத்திரை ஆரம்பமாகும் எனவும் வழமைபோன்று மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுணதீவு ஊடாகவும், மற்றய யாத்திரை செங்கலடி புனித நிக்கலஸ் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி கரடியனாறு ஊடாகவும் இரு வழிப் பாதயாத்திரையாக ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா ஆலயத்தை வந்தடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அன்னையின் இறுதி நாள் பெருவிழா மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் எதிர்வரும் 8ஆம் திகதி காலை 7மணிக்கு கூட்டுத் திருப்பலி இடம்பெற்று விழா நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam