ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் பலி
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் வடக்கில் ஜெனின் என்ற இடத்தில், பாலஸ்தீனிய ஆயுதக் குழு ஹமாஸின் தலைவர் ஒருவரையும் ஏனைய இரண்டு போராளிகளையும் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் வடக்கில் மூன்றாவது நாளாக இஸ்ரேலின் பாரிய இராணுவ நடவடிக்கை தொடர்கிறது.
இந்நிலையில், வான் வழித் தாக்குதலின்போது ஹமாஸின் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
உடனடி கருத்து
இதற்கிடையில், ஜெனினின் தென்கிழக்கில் உள்ள ஜபாப்தே நகருக்கு அருகில் ஒரே இரவில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நகரின் அகதிகள் முகாம்களில் உள்ள கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்திய பின்னர் துல்கர்மில் இருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறியதாகவும் பாலஸ்தீனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், இஸ்ரேலிய இராணுவத்திடம் இருந்து இந்த சம்பவம் தொடர்பில் உடனடி கருத்து எதுவும் வெளியாகவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |