மீண்டும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கிரான் பிரதேசம்
மட்டக்களப்பு (Batticaloa) - கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல கிராமங்கள் மீண்டும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், குறித்த கிராமங்களுக்கான போக்குவரத்து சேவையினை கடற்படையினரின் உதவியுடன் இராணுவமும் இணைந்து சேவையினை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த பலத்த காரணமாக கிரான் பிரதேச செயலகப்பிரிவு பிரிவில் வாழும் மக்களின் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்துகளும் தடைபட்டுள்ளன.
படகு சேவை
அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கு அமைய மாவட்ட அனர்த்த முகாமைத்து சேவை நிலையத்தினால் இராணுவத்தினரின் உதவியுடன் அந்தப் பகுதி மக்களுக்கான போக்குவரத்துகள் தற்போது படகுகள் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2025.02.27 ஆம் திகதியிலிருந்து பெய்துவரும் மழை காரணமாக அந்தப் பகுதியைச் சேர்ந்த சில கிராமங்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ள போதிலும் போக்குவரத்தினை பிரதேச செயலகமும் இராணுவமும் இணைந்து படகு சேவையினை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



