கிளிநொச்சி இரணைமடுக்குள சிறுபோக நெற்செய்கைக்கான நீர் திறந்து வைப்பு
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் நீர் 2025 ஆம் ஆண்டு சிறுபோக செய்கைக்காக இன்று (03.03.2025) வைப்பவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர் பாசன குளமான இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 36 அடியாக உயர்வடைந்து தற்போது வான்பாய்ந்து வருகின்றது
விவசாய நடவடிக்கைகள்
இந்நிலையில் இதன் கீழ் உள்ள முழுமையான நிலப்பரப்பில் சிறுபோக நெற் செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்றைய தினம் குளத்தின் நீர் விவசாய நடவடிக்கைகளுக்காக வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கணகாம்பிகை அம்பாள் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதில் நீர்ப்பாசன பொறியியலாளர், துறை திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |