மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை படுகொலையின் 37 ஆவது நினைவேந்தல்
மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் மகிழடித்தீவில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (28.01.2024) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டது.
சுட்டுப் படுகொலை
கடந்த 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை சுற்றிவளைத்த இராணுவத்தினர் அங்கிருந்த அப்பாவி பொதுமக்கள் 152 பேரை கைது செய்து துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தனர்.
இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டதன் 37 ஆவது நினைவு தினத்தையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வெல்லாவெளி அமைப்பாளர் குமாரசிங்கம் தலைமையில் கட்சி உறுப்பினர்கள் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய நினைவு தூபியில் சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam
