வடக்கு - கிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்

Sri Lankan Tamils Tamils Batticaloa SL Protest Northern Province of Sri Lanka
By Kumar Mar 23, 2026 09:03 AM GMT
Report

வடகிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து இன்று(23) மட்டக்களப்பில் வடகிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டம் இன இழிவுபடுத்தல்,வெறுப்பு பேச்சுகளை தமிழ் அரசியல்வாதிகளே உடன் நிறுத்து என்ற தொனிப்பொருளில்  முன்னெடுக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பில் சிறுபோக நெற்செய்கை விவசாயிகளுக்கு எரிபொருள் அனுமதி கடிதங்கள்

புதுக்குடியிருப்பில் சிறுபோக நெற்செய்கை விவசாயிகளுக்கு எரிபொருள் அனுமதி கடிதங்கள்

கவன ஈர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு காந்திபூங்காவிலிருந்து ஊர்வலமாக வந்து படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு - கிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் | Batticalo Protest Today

மக்கள் தேவைகளுக்கு குரல்கொடுப்பதை விடுத்து இனங்களிடையே இழிவுபடுத்தும் கருத்துகளை சமூக ஊடகங்களிலும் ஊடகங்களிலும் தமிழ் அரசியல்வாதிகள் வெளிப்படுத்துவதை நிறுத்தவேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்போது பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,பிரதமர்,சபாநாயகர் நாடாளுமன்ற செயலாளர், பெண்கள் விவகார அமைச்சர்,மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றிற்கான அனுப்பவதற்கான மனு ஒன்றும் வாசிக்கப்பட்டது.

தெஹ்ரானில் உச்சக்கட்ட பதற்றம்! அடுத்தடுத்து பதிவாகும் வெடிப்பு சத்தங்கள்: அதிரடி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்

தெஹ்ரானில் உச்சக்கட்ட பதற்றம்! அடுத்தடுத்து பதிவாகும் வெடிப்பு சத்தங்கள்: அதிரடி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்

கடுமையான கண்டனம்

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் சமூக ஒற்றுமை, ஜனநாயக பண்புகள் மற்றும் மக்கள் பாதுகாப்பை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அரசியல் பிரதிநிதிகள், சமீபத்தில் பொதுத் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையையும் கடுமையான கண்டனத்தையும் வலியுறுத்துகிறோம்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் மனித மரியாதைக்கு எதிரான சொற்கள் பயன்படுத்தப்படுவது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

வடக்கு - கிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் | Batticalo Protest Today

இத்தகைய வெறுப்பு தூண்டும் பேச்சுக்கள் சமூகங்களுக்கிடையேயான நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், பிரதேச மற்றும் இன அடிப்படையிலான பிளவுகளை தீவிரப்படுத்துகின்றன.

இது நாட்டின் அமைதிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நேரடி அச்சுறுத்தலாகும். மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களின் பிரச்சினைகளை பொறுப்புடன், நாகரிகத்துடன் முன்வைத்து தீர்வுகளை உருவாக்க வேண்டியவர்கள்.

ஆனால், அதற்கு பதிலாக வெறுப்பு, இழிவு மற்றும் பிரிவினை உணர்வுகளை தூண்டும் கருத்துக்களை வெளியிடுவது அரசியல் பொறுப்பின்மையின் வெளிப்பாடாகும்.

பொதுமக்களின் பாதுகாப்பு

இத்தகைய செயல்கள் ஜனநாயக மரபுகளுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் நேரடி அவமதிப்பாகும். மேலும், அரசியல்வாதிகள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் போதெல்லாம் ஆதிக்க சிந்தனைகளை பிரதிபலிக்கும் வகையிலான மொழியையும் அணுகுமுறையையும் முற்றாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

வடக்கு - கிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் | Batticalo Protest Today

மக்கள் மத்தியில் சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர புரிதலை வளர்க்கும் உரைகள் மட்டுமே அரசியல் உரையாடலின் அடிப்படையாக அமைய வேண்டும். இவ்வாறான பொறுப்பின்மை கொண்ட பேச்சுக்கள் தொடர்ந்தால், சமூகத்தில் இனவாதம், பிரதேசவாதம் மற்றும் பகைமை மனப்பான்மை ஆழப்படுத்தப்படும் அபாயம் உள்ளது.

இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு மட்டுமல்லாமல், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகக் குழுக்கள் மனஅழுத்தத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாகின்றனர். எனவே, அனைத்து அரசியல் தலைமைகளும் உடனடியாக தங்களது பொது உரைகளில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

இன, பிரதேச, மொழி அடிப்படையிலான இழிவுபடுத்தல், அவதூறு மற்றும் வெறுப்பு பேச்சுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.

 உறுதியான எதிர்ப்பு

அத்துடன், இனம், பிரதேசம், மொழி, சாதியம் மற்றும் ஆணாதிக்க சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகும் அவதூறான மற்றும் வெறுக்கத்தக்க நடத்தைகளை கண்காணிக்கவும், அவற்றைத் தடுக்கவும், தண்டிக்கவும் கூடிய தெளிவான மற்றும் வலுவான நாடாளுமன்ற நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

வடக்கு - கிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் | Batticalo Protest Today

மேலும், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் தங்களது உள்கட்டமைப்பு கொள்கைகள் மற்றும் ஒழுக்க விதிகளை உருவாக்கும் போது, இவ்வாறான வெறுப்பு பேச்சுக்களைத் தடுக்கும் உறுதியான வழிகாட்டுதல்களை இணைத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய கொள்கை மாற்றங்கள், நிலையான சமூக மாற்றத்திற்கும் நீடித்த சமூக அமைதிக்கும் அடித்தளமாக அமையும்.

“நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும். அதனை சீர்குலைக்கும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் எங்களது உறுதியான எதிர்ப்பு தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்

இதேவேளை, வெறுப்பு பேச்சுக்களை பேசும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் போராட்டமொன்று இடம்பெற்றது.

வடக்கு - கிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் | Batticalo Protest Today

யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், இனவாதம் மற்றும் பிரதேச, சாதிய வாதங்களை பேசும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், நாட்டின் சமூக ஒற்றுமை, ஜனநாயக பண்புகள் மற்றும் மக்கள் பாதுகாப்பை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பிலுள்ள அரசியல் பிரதிநிதிகள், சமீபத்தில் பொதுத் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையையும் கடுமையான கண்டனத்தையும் வலியுறுத்துகிறோம்.

 நாட்டின் அமைதி

ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் மனித மரியாதைக்கு எதிரான சொற்கள் பயன்படுத்தப்படுவது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இத்தகைய வெறுப்பு தூண்டும் பேச்சுக்கள் சமூகங்களுக்கிடையேயான நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், பிரதேச மற்றும் இன அடிப்படையிலான பிளவுகளை தீவிரப்படுத்துகின்றன.

வடக்கு - கிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் | Batticalo Protest Today

இது நாட்டின் அமைதிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நேரடி அச்சுறுத்தலாகும். மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களின் பிரச்சினைகளை பொறுப்புடன், நாகரிகத்துடன் முன்வைத்து தீர்வுகளை உருவாக்க வேண்டியவர்கள்.

ஆனால், அதற்கு பதிலாக வெறுப்பு. இழிவு மற்றும் பிரிவினை உணர்வுகளை தூண்டும் கருத்துக்களை வெளியிடுவது அரசியல் பொறுப்பின்மையின் வெளிப்பாடாகும். இத்தகைய செயல்கள் ஜனநாயக மரபுகளுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் நேரடி அவமதிப்பாகும்.

மேலும், அரசியல்வாதிகள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் போதெல்லாம் ஆதிக்க சிந்தனைகளை பிரதிபலிக்கும் வகையிலான மொழியையும் அணுகுமுறையையும் முற்றாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

மக்கள் மத்தியில் சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர புரிதலை வளர்க்கும் உரைகள் மட்டுமே அரசியல் உரையாடலின் அடிப்படையாக அமைய வேண்டும்.

மேலதிக தகவல்- தீபன்


GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US