இலங்கைக்கு கடத்த இருந்த பெருந்தொகை ஏலக்காய் மீட்பு
இராமநாதபுரம் - பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற இந்திய மதிப்பில் 1 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஏலக்காய் மண்டபம் மரைன் பொலிஸார் கைப்பற்றப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அடுத்துள்ள குந்துகால் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா , ஐஸ் போதைப்பொருள், சமையல் மஞ்சள், கடல் அட்டைகள் உள்ளிட்ட பல பொருட்கள் சமீப காலமாக பிடிபட்டு வருகிறது.
பொலிஸார் நடவடிக்கை
இதைதொடர்ந்து பாம்பன் அருகே குந்துகால் கடற்கரை பகுதியை மையப்படுத்தி இராமநாதபுரம் மாவட்ட பொலிஸார் இந்திய கடலோர காவல்படை, உளவுத்துறை , மரைன் பொலிஸார் என பல்வேறு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ,நேற்று (29.01.2024) நள்ளிரவு மன்னார் வளைகுடா கடல் வழியாக படகில் ஏலக்காய் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குந்துகால் கடற்றொழில் துறைமுக பகுதியில் மண்டபம் மரைன் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது குந்துகால் கடற்றொழில் துறைமுகம் பகுதியில் மரைன் பொலிஸாரை கண்டதும் 3 நபர்கள் மூட்டை ஒன்றை விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த மரைன் பொலிஸார் அந்த மூட்டையை சோதனை செய்தபோது அதில் 43 கிலோகிராம் ஏலக்காய் மறைத்து வைத்திருப்பதை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஏலக்காய் மூட்டையை கைப்பற்றிய மரைன் பொலிஸார் ஏலக்காய் மூட்டையை இலங்கைக்கு கடத்த முயன்ற மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைப்பற்றபட்ட மூட்டை
மேலும் கைப்பற்றபட்ட ஏலக்காய் மூட்டை இராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். கைப்பற்றப்பட்ட ஏலக்காய் இந்திய மதிப்பில் 1 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் இருக்கும் எனவும் இந்த மரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குந்துகால் கடற்கரை இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் கடத்தும் முக்கிய
கேந்திரமாக மாறியுள்ளதுடன் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் இடையே கலக்கத்தை
ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |