பதவி விலகும் எண்ணத்திலா கோட்டாபய...! பசில் வெளியிட்டுள்ள தகவல்
இந்த நாட்டின் சிறந்த தலைவரே கோட்டாபய ராஜபக்ச, தற்போதைய நெருக்கடி நிலைமையிலிருந்து நாட்டை அவர் மீட்டே தீருவார். பதவி விலகும் எண்ணம் அவருக்கு இல்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்களுமே கோருகின்றனர்.
ஜனாதிபதிக்கு ஆணை வழங்கிய மக்கள் எவரும் அவரைப் பதவி விலகுமாறு கோரவில்லை.
இதேவேளை, ராஜபக்ச சகோதரர்களுக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன.
அந்த ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். உண்மைச் செய்திகளை வெளியிட்டால் அவற்றை நாம் வரவேற்போம்.
அதைவிடுத்துப் போலிச் செய்திகளை வெளியிட்டு மக்களைக் குழப்ப வேண்டாம். இந்த நாட்டை முன்னேற்ற ராஜபக்ச சகோதரர்கள் ஓரணியில் பயணிக்கின்றனர்.
எமது பயணம் வெற்றியடைய ஆளுந்தரப்பில் உள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் என கூறியுள்ளார்.
May you like this Video
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam