இலங்கையை மீட்க பசில் எடுத்துள்ள முடிவு
இலங்கையில் நலிவடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களின் பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட நிதியமைச்சர், "நாட்டை திறக்க அரசாங்கம் முன்னுரிமையளித்துள்ளது.
உரிய முகாமைத்துவத்துடன் பொருளாதார இன்னல்களுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும். கொவிட்-19 பரவல் காரணமாக நாட்டை பல தடவைகள் முடக்க நேரிட்டது.
இதன்காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வருவாய் நாட்டிற்கு கிடைக்காது போனது. அந்த செயற்பாடுகளை மீள கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது தற்போது பொருளாதார வளர்ச்சியானது சிறந்து காணப்படுவதாக" நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.