அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கு தப்பிச் செல்லத் தயாராகும் பசில் ராஜபக்ச
பசில் ராஜபக்ச இலங்கையிலிருந்து தப்பிச் சென்று அமெரிக்காவில் ஒளிந்திருப்பதால் அவரை கைது செய்வதற்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் சிவப்பு பிடியாணை (Red Warrant) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பிடியாணையை தொடர்ந்து பசில் ராஜபக்ச அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கு தப்பிச் செல்லத் தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் அவர் அமெரிக்காவில் வதியும் வீட்டின் முகவரியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்சவிற்கு எதிரான வழக்குகள்
பசில் ராஜபக்சவிற்கு எதிராக தற்போது நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் உள்ளன. அந்த இரண்டு வழக்குகளிலுமே அவரை கைது செய்வதற்காக சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு புறம்பாக மேலும் சுமார் ஐந்து வழக்குகள் எதிர்காலத்தில் பசில் ராஜபக்சவிற்கு எதிராக நீதிமன்றத்திற்கு வரவுள்ளன.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ஆகிய பிரிவுகளால் விசாரணைகள் நடத்தப்படும் ஐந்து வழக்குகளின் விசாரணைகளே எதிர்வரும் நாட்களில் வரவுள்ளன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைப்பதற்கு முன்னரே பசில் ராஜக்ச புஷ்பாவை இழுத்துக்கொண்டு அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றார். இல்லையெனில்இ அவர் இப்போது வெலிக்கடைச் சிறைச்சாலையில் தான் இருந்திருப்பார்.
இவர் 2024 மார்ச் மாதம் 5 ஆம் திகதியே அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார். தற்போது பசில் ராஜபக்ச மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின்படி குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் படியே கோட்டை நீதவான் பிரசன்ன அமரசிங்கவினால் சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
அதுமட்டுமன்றி 2026 செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதியும் இவ்வாறானதொரு அறிவித்தல் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதாவது 'பரஸ்பர சட்ட உதவி' (Mutual Legal Assistance) என்ற அடிப்படையில் 2026 செப்டம்பர் 16 ஆம் திகதி பசில் ராஜபக்சவின் தகவல்களைக் கோரி அமெரிக்காவிற்குத் தகவல் அனுப்பியுள்ளது.
ஆனால் அந்தச் செய்திக்கு அமெரிக்காவிடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றே தெரியவந்துள்ளது.
மெக்சிகோவிற்கு தப்பிச் செல்வதற்கான முயற்சி
இவ்வாறான பின்னணியில்தான் நேற்று முன்தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் மீண்டும் சிவப்பு பிடியாணை அனுப்பப்பட்டது. பசில் ராஜபக்ச அமெரிக்காவில்:No. 150/167, Feston Ground, Fontana, California, Zip Code: 92336 என்ற முகவரியிலேயே அவர் ஒளிந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் இந்த சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் பசில் ராஜபக்ச அமெரிக்காவிலிருந்து வெளியேறுவதற்கு தயாராவதாக தகவல்கள் கசிந்துள்ளன. அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கு தப்பிச் செல்வே முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது.
மெக்சிகோவில் இருந்தவாறு அமெரிக்க அல்லது மெக்சிகோ நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்து தன்னைக் கைது செய்ய வேண்டாம் இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டாம் என்ற அடிப்படையில் அவர் நீதிமன்றத்தை நாடவுள்ளாராம்.
பெரும்பாலும் அவர் அமெரிக்க நீதிமன்றத்திலேயே இந்த வழக்கைத் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. இதனால் அவர் எப்படியாவது இலங்கைக்கு கொண்டுவரப்படுவதைத் தடுக்க முயற்சிப்பதாகவே தெரியவந்துள்ளது.
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri