இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்தார் பசில்!
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டோவல் ஆகியோருக்கு இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பசில் ராஜபக்ச இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டோவல் , அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் மிகவும் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டதுடன், இரு நாடுகளின் பரஸ்பர மூலோபாய நலன்கள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினார்.
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் அமைச்சருடன் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
அஜித் குமார் டோவல் இந்தியாவின் ஐந்தாவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆவார். அவர் அமைச்சரவை அந்தஸ்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னை எப்படி அப்படி கூறலாம், கண்டிப்பாக புகார் அளிப்பேன்... சீரியல் நடிகை கம்பம் மீனா காட்டம் Cineulagam
பிரபல நடிகைக்கும் நடிகர் விஜயகாந்துக்கும் நடக்கவிருந்த திருமணம்.. யார் அந்த நடிகை தெரியுமா? Cineulagam