தன்னை பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிய பசில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதமராக தன்னை நியமிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தாம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்
ரணில் நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்டவர் அல்ல
69 இலட்சம் வாக்குகளைப் பெற்றவருக்கு அதிகாரம் வழங்குவதும் 250,000 வாக்குகளைப் பெற்றவருக்கு அதிகாரம் வழங்குவதும் மக்கள் ஆணைக்கு எதிரானது எனவும் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்க விரும்புவதாகவும் பசில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பிரதமர் நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட பிரதமர் அல்ல எனவும் ஜனாதிபதியால் தமது கட்சியில் இருந்து பரிந்துரைக்கப்பட்டமையால் நியமிக்கப்பட்டவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொது ஜன பெரமுனவிற்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும்
ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவிற்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டுமென்பதுடன், தனது கட்சிக்கு பிரதமர் பதவியும் அமைச்சரவையும் வழங்கப்பட வேண்டும் என்பதில் தான் இன்னமும் உறுதியா இருப்பதாக பசில் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.
மக்கள் வழங்கிய உரிமைகள் மீண்டும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வழங்கப்பட வேண்டும், நல்ல திறமையான நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற் உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
