எனது தொலைபேசியின் ரிங்டோனும் அதுதான்! கப்புட்டு கா கா பாடல் குறித்து பகிரங்கமாக அறிவித்த பசில் (Video)
நாட்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது பாடப்பட்ட “ கப்புட்டு கா கா, பசில், பசில், பசில்” என்ற பாடலே தன்னுடைய தொலைபேசியின் ரிங்டோன் என முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார்.
இன்றைய தினம் தனது தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பது தொடர்பான அறிவித்தலை வெளியிடும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்றை பசில் ராஜபக்ச ஏற்பாடு செய்திருந்தார்.
இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது, தன்னுடைய ரிங்கிங் டோனும் குறித்த பசில் பசில் என்ற பாடல் தான் என குறிப்பிட்டுள்ளார்.
பிரபலமான பாடல்

சிறிது காலத்திற்கு முன்னர் முன்னாள் அமைச்சர் வழங்கிய நேர்காணல் ஒன்றின்போது கப்புட்டாஸ் என காகங்களை விளித்து கூறிய வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் கேலிக்குள்ளாக்கப்பட்டிருந்தது.
அதனையடுத்து நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையின்போது நடத்தப்பட்ட பொதுமக்கள் போராட்டங்களில் பசில் ராஜபக்சவை விமர்சிக்கும் வகையில் ஆர்ப்பாட்டக் காரர்கள் கப்புட்டு கா கா பசில் பசில் என கூச்சலிட்டமை ஒரு பாடலாக, பலரும் முனு முனுக்கும் பாடலாக மாறியது.
அத்துடன், மக்கள் போராட்டம் இடம்பெறும் போராட்டக் களத்தில் காகத்தைப் போன்ற உருவங்களுக்கு, குரக்கன் சால்வை அணிவித்து பசில் ராஜபக்சவை கேலி செய்யும் வகையில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 21 மணி நேரம் முன்
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam