மாத மற்றும் நாள் சம்பளத்தொகை அதிகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
தேசிய குறைந்தபட்ச மாத மற்றும் நாளென்றுக்கான சம்பளத்தொகைகளை அதிகரிப்பது தொடர்பான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் தொழில் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச மாத சம்பளம்
இதன்படி, தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குறைந்தபட்ச மாதாந்த சம்பளத் தொகையான 12500 ரூபாவை 17500 ரூபாவாக உயர்த்துவதற்கான யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தேசிய குறைந்தபட்ச மாத சம்பளத்தை ஐயாயிரம் ரூபாவினால் அதிகரிக்கவே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச நாள் சம்பளம்
மேலும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத் தொகையை 500 ரூபாவிலிருந்து 700 ரூபாவாக உயர்த்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நெருக்கடி நிலையில் அரசாங்கம் |
பணவீக்க அதிகரிப்பு காரணமாக குறைந்த சம்பளம் ஈட்டுவோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ள நிலையிலேயே இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - கமல்