மட்டக்களப்பில் அரசவங்கி ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
அரச வங்கிகள் மீது மத்திய வங்கியால் திணிக்கப்பட்ட சில தடைகளை நீக்க கோரியும், அரச வங்கி ஊழியர்களின் ஒன்றினைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று(12) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது.
தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு மாவட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் பே. கவாஸ்கரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டம் பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகியது.
இதில் கலந்துகொண்ட அரச வங்கி ஊழியர்கள் 1996 இற்கு பின்னைய ஓய்வூதிய கொடுப்பு முறையின் உத்தேச திருத்தங்களை உடன் செயற்படுத்துக, அரச வங்கிகளின் உழியர் உரிமைகள் கத்தரிப்பதற்கு எதிராக அணிதிரள்வோம், ஓய்வூதிய கொடுப்பனவு முறை இல்லாத அரச வங்கிகளில் அந்த எரிமைகளை உடன் நிறுத்துக, எச்.டி.எப்.சி. மற்றும் எஸ்.எம்.ஜ.பி வங்கிகளின் பிரச்சனைகளை உடன் தீர்க்க, போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் சுமார் 30 நிமிடம் ஈடுபட்ட பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.











நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 8 மணி நேரம் முன்

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri

நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam
