இலங்கையில் அறிமுகப்படுத்தப்ட்டுள்ள புதிய நடைமுறை - வங்கிகள் விதிக்கும் தரகுப்பணம் தொடர்பில் சர்ச்சை
வங்கி அட்டைகள் மூலம் பேருந்துக் கட்டணங்களைச் செலுத்தும் புதிய நடைமுறை இலங்கையில் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் வங்கிகள் விதிக்கும் தரகுப்பணம் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.
அதன்படி இந்த முறைக்கு வங்கிகள் விதிக்கும் அதிகரித்த தரகு பணம் குறித்து ஐக்கிய போக்குவரத்து தொழிற்சங்கக் கூட்டணி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய போக்குவரத்து தொழிற்சங்கக் கூட்டணியின் தலைவர் சம்பத் ரணசிங்க கூறுகையில்,
வங்கிகளைப் பணக்காரர்களாக்க நாங்கள் பேருந்துகளை இயக்கவில்லை. அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட முன் பண அட்டைகள் அல்லது அட்டைகள் மூலம் பணம் செலுத்திப் பேருந்துகளில் பயணிக்கும் வசதியை வழங்குவது குறித்து அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கின்றோம்.
சில பிரச்சினைகள்

பேருந்து உரிமையாளர்கள் இந்தக் கட்டண முறையை வரவேற்றாலும், இது வங்கிக் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதால் சில பிரச்சினைகள் எழுந்துள்ளன. அரசாங்கம் அல்லது போக்குவரத்து அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, 1 வீதத்தை விடக் குறைவான தரகு பண விகிதம் மட்டுமே வங்கிகளால் அறவிடப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது, வங்கிகள் 1.3 வீதம் முதல் 1.8 வீதம் வரையிலான வீதத்தில் தரகு பணத்தை அறவிடத் தயாராகி வருவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இது எங்களுக்கு ஆதங்கத்தை அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
தரகு பணம்
இதேவேளை இது குறித்து பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கூறுகையில்,
இந்த அதிக தரகு பண விகிதங்களை ஏற்கப் பேருந்து உரிமையாளர்கள் தயாராக இல்லை. மிகவும் கடினமான சூழ்நிலையில் பேருந்தை இயக்கி சம்பாதிக்கும் பேருந்துக் கட்டண வருமானத்தில், 1.5 வீதம் வரையிலான தரகுப் பணத்தை வங்கிக்குச் செலுத்தத் தயாராக இல்லை.

ஒரு மாதாந்திர சந்தா போல, வங்கிகள் தங்களுக்குக் கிடைக்காமல் போகும் பணத்தை இந்தப் பேருந்து கட்டணத்தில் இருந்து எடுத்துக்கொள்ள முயன்றால், அது மிகவும் அநியாயமானது.
எனவே, இந்தத் திட்டம் வெற்றியடைய, வங்கிகள் குறைந்த தரகு பண விகிதத்தில் இந்தப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஒட்டுமொத்த வங்கிக் கட்டமைப்பிடமும் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 12 மணி நேரம் முன்
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri