சீன ஆராய்ச்சிக் கப்பலின் நோக்கம் இதுவே! வெளிப்படுத்திய அமைச்சர் பந்துல
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா அல்லது சீனாவின் நலன்களுக்கு பாதகமாக இலங்கை செயற்படாது என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், சீனாவும், இந்தியாவும் இலங்கையின் நண்பர்களாக செயற்படுகின்றன.
அதேநேரம் இலங்கையுடன் இந்த இரண்டு நாடுகளும் இணைந்து செயற்படுகின்றன.
பெரும் சர்ச்சைக்கு மத்தியில் இலங்கை வரும் சீன கப்பல் - தமிழகத்தில் தீவிர பாதுகாப்பு |
சீன ஆராய்ச்சிக் கப்பலின் நோக்கம்
இந்த நிலையில் எதிர்வரும் 11ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் நிறுத்தப்படவுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பலான யுவான் வாங் 5இன் நோக்கம் எரிபொருள் நிரப்புதல் மட்டுமே.
கப்பலோ அல்லது அதன் பணியாளர்களோ இலங்கையில் எந்தவொரு உள் விவகாரங்களிலும் அல்லது வேறு விடயத்திலும் ஈடுபடப் போவதில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இராஜதந்திர மட்டத்தில் விளக்கம்
சீன கப்பல் குறித்து இந்தியாவுக்கு உறுதியளிக்க அவசர முயற்சி |
யுவான் வாங் 5 என்ற ஆராய்ச்சிக் கப்பல் ஹம்பாந்தோட்டை நோக்கிச் செல்வதன் மூலம்
ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இரு நாடுகளுக்கும்
இராஜதந்திர மட்டத்தில் விளக்கமளித்துள்ளதாகவும் பந்துல குணவர்த்தன
தெரிவித்துள்ளார்.