நாடு மீண்டெழ அரசியல் தீர்வு அன்றி பொருளாதார தீர்வே அவசியம் : பந்துல குணவர்த்தன
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை எனவும், பொருளாதாரத் தீர்வுகளே அவசியம் எனவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (15.11.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணை கிடைத்ததன் பின்னர், தடைப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிக்க முடியும்.
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரலாற்றுச் சிறப்புமிக்க, ரெடிகல் மற்றும் புரட்சியான ஒரு வரவு - செலவுத் திட்டத்தையே இம்முறை சமர்ப்பித்துள்ளார்.
இது வங்குரோத்து அடைந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவித்த ஒரு நாட்டின் வரவு - செலவுத் திட்டமாகும். வேறு எந்தவொரு நிதி அமைச்சரும் வரவு - செலவுத் திட்டத்தை முன்வைக்கும்போது இவ்வாறானதொரு நிலைமை நாட்டில் இருக்கவில்லை.
ஏற்றுமதி வருமானம் இல்லை
இந்நாடு, பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்தமைக்கு தர்க்க ரீதியிலான பிரதான இரண்டு காரணங்களே உள்ளன. முதலாவது, அரச வரவு - செலவுத் திட்டத்தில் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை.
இரண்டாவது, சர்வதேச கொடுப்பனவுக் கையிருப்பின் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை ஆகியவை ஆகும். நாட்டின் அன்றாட செயற்பாடுகளுக்காக அரசு மேற்கொள்ளும் நிர்வாகச் செலவுகளுக்குப் போதுமான அளவு நிதி இல்லாமை மற்றும் இறக்குமதிகளுக்கு ஏற்ப ஏற்றுமதி வருமானம் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தப் பற்றாக்குறைகள் ஏற்படுகின்றன.
கடந்த காலங்களில் அனைத்து அரசுகளும் பின்வரும் மூன்று பிரதான வழிமுறைகளின் ஊடாக இந்தப் பற்றாக்குறைகளை ஈடுசெய்துள்ளன. முதலாவது, தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கடன்களைப் பெற்றுக்கொள்ளல். இரண்டாவது, அரச சொத்துக்களை விற்பனை செய்தல்.
மூன்றாவது, இவை இரண்டும் போதுமானதாக இல்லாதவிடத்து பணத்தை அச்சிடுதல் ஆகும். அரச நிதி தொடர்பான அனைத்து முகாமைத்துவ அதிகாரமும் நாடாளுமன்றத்தூக்கி உள்ளது. இவ்வாறு பற்றாக்குறை தொடர்ந்தும் ஏற்பட்டு, நாடு வங்குரோத்து நிலைக்குச் செல்லாமல் இருப்பதற்காக கடந்த காலங்களில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டன.
ஆரம்பிக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள்
துரதிஷ்டவசமாக அண்மைய வருடங்களில் இந்த சட்டங்களுக்கேற்ப செயற்படாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது.
இயலுமான அளவு அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ளல், அரசின் மூலதனச் செலவுகள் மற்றும் நிர்வாகச் செலவுகளைக் குறைத்தல், ஏற்றுமதி மூலம் நாட்டுக்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணியை அதிகரித்தல், இறக்குமதிக்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியைக் குறைத்தல் ஆகிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதன் ஊடாக சர்வதேச கொடுப்பனவுகளில் நடைமுறைக் கணக்கு மேலதிகக் கையிருப்பு மீதியைப் பேணுவதன் மூலம் அதில் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
வரவு - செலவுத் திட்டத்துக்குப் பிறகு, சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடன் கிடைக்கவுள்ளது.
கடன் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்ட
பின்னர் வரவு - செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள அனைத்து
விடயங்களையும் செயல்படுத்த போதுமான நிதி எமக்குக் கிடைக்கும் என
எதிர்பார்த்துள்ளோம். அதன் பிறகு, முடங்கிய அனைத்து அபிவிருத்தித்
திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிக்க முடியும்." - என தெரிவித்துள்ளார்.

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam
