பிக்குவின் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்
மாத்தறை பகுதியில் பிக்கு ஒருவரின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பல்லேகம, கங்கொட வீதியில் அமைந்துள்ள சம்போதி முதியோர் இல்லத்திற்கு அருகில் குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெனியாய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணை
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் 37 வயதுடைய திருமணமானவர் என தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர், பிக்குவின் சகோதரியுடன் தொடர்பு வைத்திருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இருவருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் பொலிஸ் உத்தியோகத்தரிக் கழுத்து பகுதியில் பிக்கு சரமாரியாக தாக்கியுள்ளார்.
இந்நிலையில், தாக்குதல் தொடர்பில் கைதான பிக்கு 18 வயதுடையவர் எனவும், சம்பவம் தொடர்பில் தெனியாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
You May like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
