கட்டுநாயக்க விமானத்தில் அமெரிக்கா வாழ் இலங்கையர் கைது
கட்டுநாயக்க விமான நிலைய புறப்பாடு முனையத்தில் வைத்து அமெரிக்கா வாழ் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருந்த நபரேநேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையர் கைது
சந்தேக நபர் சட்டவிரோதமான முறையில் மூன்று தங்க பிஸ்கட்களை அமெரிக்காவிற்கு கடத்த முயன்றதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் நேற்று காலை 10.05 மணியளவில் EK-651 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் டுபாய் நோக்கி புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். டுபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்ல தயாராக இருந்ததும் தெரியவந்துள்ளது.
3 தங்க பிஸ்கட்டுகள்
300 கிராம் எடையுள்ள இந்த மூன்று தங்க பிஸ்கட்டுகளும் பயணப் பொதிகளில் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் அமெரிக்காவில் வசிக்கும் 42 வயதுடைய இலங்கையர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



