வாழை மரத்தின் இடைப்பகுதியில் இருந்து உருவான வாழைக்குலை: பார்க்க படையெடுக்கும் மக்கள்
நுவரெலியா- கொட்டகலை பாத்தியாபுரம் பகுதியில் வீட்டு தோட்டத்தில் உள்ள வாழை மரத்தின் இடைப்பகுதியில் இருந்து வாழைக்குலை ஒன்று உருவாகியுள்ளமை அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கொட்டகலை பாத்தியாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டுத் தோட்டத்தில் காணப்படும் இந்த வாழை மரமே தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பொதுவாக வாழைமரத்தின் உச்சிப் பகுதியில் இருந்து வெளிவரும் வாழைக்குலை, இந்த முறை மரத்தின் நடுப்பகுதியில், இரு தண்டுகளுக்கிடையில் உருவாகியுள்ளமை அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை மாற்றம்
இயற்கையின் விசித்திர நிகழ்வாக கருதப்படும் இந்த சம்பவத்தை பார்ப்பதற்காக அயலவர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் தொடர்ச்சியாக அந்த வீட்டிற்கு வருகை தருகின்றனர்.

சிலர் இதனை அரிய இயற்கை மாற்றமாகக் கருதுகின்ற நிலையில், இன்னும் சிலர் இதனை தெய்வ அதிசயமாகவும் பேசிக் கொள்கின்றனர்.
வாழைமரத்தின் உட்பகுதியில் சிக்கியபடி வெளிவந்துள்ள இந்த வாழைக்குலை தற்போது சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.



என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri