இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய பங்களாதேஷ் அணி
புதிய இணைப்பு
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாம் ஒருநாள் தொடரை 2-1 என்ற விகித்த்தில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்க்ப்பட்ட 50 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதனையடுத்து 236 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 40.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 237 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றுள்ளது.

முதலாம் இணைப்பு
இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு வெற்றி இலக்காக 236 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பங்களாதேஸ் அணி
சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஜனித் லியனகே இலங்கை அணி சார்பாக 101 ஓட்டங்களை பெற்றார்.

அதேவேளை, பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட டஸ்கின் அஹ்மத் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
அதேவேளை, பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 76 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam