2024 மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பதிவான வரலாற்று வெற்றி
2024 மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் மகளிர் அணியை வீழ்த்தி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
இந்த போட்டி டெல்லி மைதானத்தில் நேற்று(17.03.2024) இடம்பெற்றது.
சகல விக்கெட்டுகளும் இழப்பு
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 18.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை பெற்றது. அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஷஃபாலி வர்மா அதிகபட்சமாக 44 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் அதிகபட்சமாக 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
வரலாற்று வெற்றி
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் எல்லிஸ் பெர்ரி அதிகபட்சமாக 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இறுதி போட்டியில் வெற்றிபெறாத நிலையில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி அந்த வெற்றியை பதிவு செய்து கனவை நனவாக்கியுள்ளதாக இரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 2 மணி நேரம் முன்

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: ரிஷி சுனக் உட்பட பலர் விசாரணைக்குட்படுத்தப்படலாம் News Lankasri
