பத்து வகையான உணவுகளின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
பத்து வகையான உணவு வகைகளை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை விரைவில் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது நிலவும் உணவு நெருக்கடிக்கு தீர்வு காண உலக உணவுத் திட்டத்தின் (WFP) அதிகாரிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடி வருவதாக பண்டார தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பிரதமர் விக்ரமசிங்க குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்களை வகுத்துள்ளார். உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு 120 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது என்றார்.
விரிசல் அடைந்த ஜப்பானுடனான உறவுகள்
நாட்டில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை மற்றும் மக்கள் அனுபவிக்கும் விளைவுகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பண்டார மேற்கண்டவாறு கூறினார்.
ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ஜப்பானின் இலகு ரயில் திட்ட முன்மொழிவு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து விரிசல் அடைந்த ஜப்பானுடனான உறவுகளை விக்கிரமசிங்க சரிசெய்து வருகிறார். அவர்கள் இப்போது இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
உலகின் ஏனைய நாடுகள் எம்முடன் இருக்கும் போதுதான் இந்த நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்” என பண்டார தெரிவித்தார்.
இலங்கை எரிவாயு விநியோகஸ்தர்களுக்கு பாரிய பாக்கிகளை செலுத்த வேண்டியிருப்பதால், காத்திருப்பு கடனுதவியை கோரியதாகவும், அது வராததால் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டதாகவும், அதன் விளைவாக இன்று நாடு எரிவாயு தட்டுப்பாட்டைச் சந்தித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
யூரியாவை இறக்குமதி செய்ய நடவடிக்கை
“விக்ரமசிங்க ஓமானிய எரிவாயு வர்த்தக நிறுவனத்துடன் தேவையான அளவு எரிவாயுவை அங்கிருந்து இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இன்னும் சில நாட்களில் மூன்று எரிவாயு தாங்கிகள் இலங்கையை வந்தடைய உள்ளன.
ஜூலை 10 ஆம் திகதிக்குள் எரிவாயு பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் மற்றும் ஜூலை இறுதிக்குள் நிலையான தீர்வு கிடைக்கும். எங்களால் ஒரு நாளைக்கு 100,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியும்” என்று பண்டார கூறினார்.
இரசாயன உர இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதன் மூலம், இந்த நாட்டில் விவசாயத் துறை முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், நெல் பயிர்ச்செய்கையின் அறுவடையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
5,000 மெட்ரிக் தொன் யூரியாவை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் மகா பருவத்தில் இருந்து விவசாயிகளுக்கு இரசாயன உரங்களை தடையின்றி விநியோகிக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
