மூன்று நாட்களுக்குப் பின்னர் தனியார் பேருந்துகளுக்கு இன்று எரிபொருள் விநியோகம்
கடந்த 27ம் திகதியிலிருந்து 28ம் திகதி மதியம் வரை தமக்கு எரிபொருள் வழங்ககோரி பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சாலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தனியார் பேருந்துகளுக்கும் டீசல் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் டீசல் விநியோகம் இன்றைய தினம் இடம்பெற்றது.
சேவையை வழங்க முடியாத நிலை
இதனை பெற்றுக் கொள்வதற்காக தனியார் பேருந்துகள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுக் கொண்டு சென்றனர்.
இதேவேளை பருத்தித்துறை சாலை அத்தியட்சகர் எரிபொருள் விநியோகத்தை உரிய
காலத்தில் மேற்கொள்ளாமையால் உரிய சேவையை வழங்க முடியாதுள்ளதாகவும் இன்றைய
தினம் பருத்தித்துறை கட்டைக்காடு இடையிலான 11 மணி பயணிகள் சேவைகள் இடை
நிறுத்தப்பட்டதாகவும்
வடமராட்சி கிழக்கு தனியார் பேருந்து சேவை சங்கத்தினர் தெரிவித்தனர்.

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
