யாழில் நீண்டகால சுகாதார சீர்கேடு: வெதுப்பகத்திற்கு சீல்
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியி்ல் நீண்டகாலமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வெதுப்பகம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி, வெதுப்பக உரிமையாளருக்கு எதிராக சுழிபுரம் பொது சுகாதார பரிசோதகரினால் இன்றையதினம் (29.08.2024) மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த சில நாட்களாக உணவு உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களைப் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கு தாக்கல்
அந்த வகையில், கடந்த வாரம் சுழிபுரம் பிரிவு பொது சுகாதார பரிசோதகர் தலமையில் பொது சுகாதார பரிசோதகர்களால் ஏற்கனவே வழங்கப்பட்ட குறைபாடுகள் தொடர்பான அறிவுறுத்தல்களை செய்யாத உணவு கையாளும் நிலையங்களை இனங்கண்டு பரிசோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இதன்போது, நீண்டகாலமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வெதுப்பகம் ஒன்று சிக்கிக்கொண்டதையடுத்து, வெதுப்பக உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 7 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
