கொழும்பில் பெண்களுக்கு ஆபத்தாக மாறியுள்ள அழகுசாதன பொருட்கள் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலையில் போலியான அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கடை ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
போலியான அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்படும் அதன் உரிமையாளரை கைது செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடையில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த சுமார் 3 லட்சம் ரூபாய் பெறுமதியான 27 வகையான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் க்ரீம்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அழகுசாதன பொருட்கள்
பிலியந்தலை ஜாலியகொட பிரதேசத்தில் உள்ள கடையில் தமது பிரதிநிதித்துவ முகவர் நிலையத்தின் அனுமதிப் பத்திரத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட அழகுசாதன பொருட்களின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போலி அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அழகுக்கலை நிலையம் நடத்தும் நிறுவனத்தின் சட்டப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய, நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவின் பேரில் பெண் அதிகாரி ஒருவர் வாடிக்கையாளரைப் போன்று மாறுவேடமிட்டு 1350 ரூபாவை செலுத்தி முகத்திற்கு பயன்படுத்தும் திரவம் ஒன்று பெற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் அது போலியானதென தெரியவந்துள்ளது.
பொலிஸார் சுற்றிவளைப்பு
அதற்கமைய, பொலிஸார் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு அனைத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கடையின் உரிமையாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவர் கொழும்பு பிரதேசத்தில் இருந்து மொத்தமாக கொள்வனவு செய்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri