பிரான்ஸ் ரூபன் - தாவூத் இப்ராஹிம் தொடர்பு.. அச்சத்தில் இந்திய பாதுகாப்புத்துறை!
பிரான்ஸ் ரூபன் மற்றும் பட்டுவத்த சாமர ஆகியோர் தாவூத் இப்ராஹிமுடன் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர் என்பதை இந்தியப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்தியாவில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல் தலைவரும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான தாவூத் இப்ராஹிமின் கும்பலுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தல்காரர்களான பிரான்ஸ் ரூபன் மற்றும் பட்டுவத்த சாமர ஆகியோர் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதை புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி இந்தியப் பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர்.
தாவூத் இப்ராஹிம்
தாவூத் இப்ராஹிம் நடத்தும் 'தாவூத் இப்ராஹிம் சிண்டிகேட்' என்ற அமைப்பு தென்னிந்தியா வழியாக போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலை நடத்தி வருகிறது. மேலும், உலகம் முழுவதும் பல நாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் இந்தக் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

பிரான்ஸ் ரூபன் மற்றும் பட்டுவத்த சாமர ஆகியோர் இலங்கையில் பாதாள உலக வலையமைப்பு மூலம் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தங்களின் உள்ளூர் எஜன்டுகளின் உதவியுடன் நாட்டிற்குள் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை பரிமாற்றுவதற்காக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதும் தெரியவந்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள்-ரூபன்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வரும் ரூபன் பிரான்சில் தங்கியுள்ளார், மேலும் பட்டுவத்த சாமர சில காலமாக ரூபனுடன் சேர்ந்து செயற்பட்டு வருவதாக பாதுகாப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், சமீபத்தில் திக்கோவிட்ட கடற்றொழில் துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட சீதேவி படகிலும், சில நாட்களுக்கு முன்பு மாலைதீவில் கைப்பற்றப்பட்ட படகிலுள்ள போதைப்பொருட்களும் பட்டுவத்த சாமரவுக்கு சொந்தமானவை என்று தகவல் கிடைத்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan
யார் இந்த கிரிஜா? பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகள், திடீர் ட்ரெண்டிங், முழு விவரம்... Cineulagam