கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு! யாழில் கைதான மற்றுமொரு சந்தேகநபர்..
கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை நேற்று(10) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
குறித்த சந்தேக நபர் காரில் பயணித்த போது கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
காரில் இருந்து வாள், 5000 வரையான போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் பயணித்த கார் போலி இலக்க தகடு கொண்ட கார் என பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு வாகன உதவி புரிந்தார் என்ற அடிப்படையில் கைதான குறித்த நபருக்கு யாழ்ப்பாணத்தில் இயங்கும் வன்முறை கும்பல்களுடன் தொடர்புள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முப்பது வயது மதிக்கத்தக்க சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ள குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார், போலி இலக்க தகடு, ஆயுதம், போதைப்பொருள் என்பனவற்றுக்கு யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்தி நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன் அதன் பின்னர் கொழும்பு விசேட பொலிஸ் குழுவினரிடம் சந்தேக நபரை ஒப்படைக்கவுள்ளனர்.
இதேவேளை கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் அண்மையில் யாழில் கைது செய்யப்பட்ட மூவரும் கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் குழுவால் மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
சூர்யா நிலைமையை பயன்படுத்தி சுந்தரவல்லி போட்ட கிரிமினல் பிளான், நந்தினி அதிரடி... மூன்று முடிச்சு புரொமோ Cineulagam
சக்திக்கு என்ன ஆனது, குணசேகரன் மறைக்கும் தேவகி யார், பல உண்மை வெளிவந்த எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
எலிமினேஷனுக்கு பிறகு அழுத முகத்துடன் வீட்டிற்கு வந்த பிக்பாஸ் 9 பிரவீன்... அடுத்து நடந்த விஷயம், வீடியோ, இதோ Cineulagam