பூதாகரமான செல்வம் அடைக்கலநாதன் விவகாரம்! சற்றுமுன் CIDயில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் இன்றையதினம்(11) அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்து விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், செல்வம் அடைக்கலநாதன் தனது கட்சியில் உ்ள்ள ஒரு உறுப்பினர் சுரேஸ் என்பவருடன் உரையடுகின்ற ஒரு குரல் பதிவு தற்போது வெளியாகியுள்ளது.
விசாரணை
அந்தக் குரல் பதிவிலே பல்வேறு விடயங்கள் பேசப்படுகின்றது.அத்தோடு, சுரேஸ் என்ற நபர் அச்சுறுத்தப்படுகின்றார்.

இதனையடுத்து, சில நாட்களின் பின்னர் சுரேஸ் நீர்கொழுப்பு பகுதியிலே தவறான முடிவெடுத்து உயிரிழந்திருப்பதாக தகவல் வெளிவருகின்றது.
குறித்த நபர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளாரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.
முறைப்பாடு
மேலும், பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதுடன் இது தொடர்பில் தேசியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் அக்கறை கொள்வதாக இல்லை.
[
எனவே, இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தாம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
யார் இந்த கிரிஜா? பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகள், திடீர் ட்ரெண்டிங், முழு விவரம்... Cineulagam