முல்லைத்தீவில் மூடப்பட்ட வெதுப்பகம்: அழிக்கப்பட்ட உணவுப் பொருட்கள்
முல்லைத்தீவு - முத்தையன்கட்டு பகுதியில் இயங்கி வரும் வெதுப்பகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையில் மனித நுகர்விற்கு ஒவ்வாத 25 கிலோகிராமிற்கு மேற்பட்ட உற்பத்தி பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் ஒன்று இன்றையதினம் (17.04.2025) இடம்பெற்றுள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு பகுதியில் இயங்கி வரும் வெதுப்பகத்தில் ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரியின் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வெதுப்பக உற்பத்தி பொருட்கள் அழிப்பு
அதன்போது மனித நுகர்விற்கு பொருத்தமற்ற 25 கிலோகிராமிற்கு மேற்பட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்கள் கைப்பற்றப்பட்டு உடனடியாக அழிக்கப்பட்டுள்ளன.
குறித்த வெதுப்பகம் சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வருவதனால் குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் வரை மூடப்பட்டுள்ளதுடன் 10 நாட்களில் சுகாதார குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படவேண்டும் எனவும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாது இருப்பின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுச்சுகாதார பரிசோதகரினால் வெதுப்பக உரிமையாளருக்கு எச்சரிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடதக்கது.








எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam
