இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய மூவருக்கும் பிணை
கடந்த மாதம் இந்தியாவிலிருந்து படகு மூலம் யாழ். குடத்தனையை வந்தடைந்த மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை நேற்று (16.11.2023) யாழ். பருத்தித்துறை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
விளக்கமறியல்
பிணையில் விடுவிக்கப்பட்ட மூவரும் யுத்த காலத்தில் இந்தியா - தமிழ்நாட்டிற்க்கு புலம் பெயர்ந்து நீண்டகாலம் அங்கு வசித்து வந்த நிலையில் படகு மூலம் நாடு திரும்பி இருந்தனர்.
அவர்கள் தமது சொந்த ஊரான குடத்தனை பகுதியில் தங்கி இருந்த வேளை அவர்களை கைது செய்த பொலிஸார் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், பருத்தித்துறை நீதிமன்றம் நேற்றைய தினம் தலா ஒரு இலட்சம் ஆட்பிணை மற்றும் வாராந்தம் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடப்படவேண்டும் என்கின்ற நிபத்தனையில் பிணை வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
