இஸ்ரேலுடன் இருந்த உறவை முதன்முதலாக முறித்துகொண்ட அரபு நாடு
இஸ்ரேலுடனான உறவை முறித்துக்கொள்ளும் நோக்கில் இஸ்ரேலுக்கான தமது தூதரை திரும்ப பெருவதாக பஹ்ரைன் அறிவித்துள்ளது.
இந்நிலையில் பஹ்ரைனுக்கான இஸ்ரேலிய தூதர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் இஸ்ரேலுடனான பஹ்ரைனின் பொருளாதார உறவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.
காசா மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே பஹ்ரைன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
கோபத்தில் இருக்கும் அரபு நாடுகள்
கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் நோக்கில் இன்று வரை இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.
போர் நிறுத்தம் குறித்து ஐ.நா உட்பட பல்வேறு நாடுகள் இஸ்ரேலுக்கு கோரிக்கை விடுத்தாலும் இஸ்ரேல் பிரதமர் அதனை பொருட்படுத்தவில்லை.
காசாவில் இஸ்ரேல் நடத்தும் இந்த தாக்குதல் குறித்து பல்வேறு அரபு நாடுகள் கோபத்தில் இருந்தாலும் தற்போது பஹ்ரைன் மட்டுமே தன்னுடைய மொத்த உறவை துண்டித்துள்ளது.
இதேபோல் தென் அமெரிக்க நாடான ஒலிவியாவும் இஸ்ரேலுடனான உறவை துண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri
