விபத்துக்குள்ளான இந்திய கடற்படை உலங்கு வானூர்தி: சம்பவ இடத்திலேயே விமானி பலி
இந்தியக் கடற்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்று ஓடுபாதையிலேயே விழுந்து நொருங்கியதில் விமானி சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவமானது நேற்று (04.11.2023) கேரள மாநிலம் கொச்சியில் உள்ள இந்திய கடற்படைத்தளத்திலேயே இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இந்தியக் கடற்படைக்கு சொந்தமான ' சீட்டாக்' என்ற உலங்கு வானூர்தி வழக்கமான ரோந்துப் பணிக்காக பறப்பில் ஈடுபடுவதற்காக ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட வேளை, சில நொடிகளிலேயே மீண்டும் ஓடு பாதையில் வேகமாக விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் உலங்கு வானூர்தி விழுந்து நொருங்கியதால் விமானி உயிரிழந்ததாகவும், மாலுமி படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காயமடைந்த மாலுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இந்திய கடற்படை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
