கொழும்பில் பிரான்ஸ் பெண் ஒருவருக்கு சாரதி செய்த மோசமான செயல்
பிரான்ஸ் பெண் ஒருவரிடம் முச்சக்கர வண்டி கட்டணத்திற்கு பதிலாக தகாத நடவடிக்கையில் ஈடுபட அழைத்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் கைது செய்யப்பட்டு அளுத்கடை இலக்கம் 06 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்.
இலங்கையில் வேலை விசாவில் தங்கியிருந்த 35 வயதுடைய பிரான்ஸ் நாட்டுப் பெண், கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வாடகைப் பயணத்திற்காக வாடகைச் சேவைகளை வழங்கும் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கிய தகவலுக்கமைய, வருகைத்தந்த முச்சக்கர வண்டி சாரதியே இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த பெண்ணிடம் வாடகை சேவை நிறுவனம், வங்கி அட்டை மூலம் பணம் செலுத்த முடியும் என அறிவித்துள்ளது. எனினும் சாரதி இதனை நிராகரித்துள்ளர்.
அத்துடன் பயணத்திற்கான கட்டணத்திற்குப் பதிலாக தகாத உறவுக்கு வருமாறு அவரை அழைத்துள்ளார்.
சாரதியை திட்டிவிட்டு பிரான்ஸ் பெண் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.இரண்டு நாட்கள் கழித்து, ஜனவரி 4ஆம் திகதி, குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய, பணியகம் உடனடியாகச் செயற்பட்டு, அக்குறணையைச் சேர்ந்த 28 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியை கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியது.
சம்பவம் தொடர்பில் பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தரவின் பணிப்புரையின் பேரில் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பிரதான பரிசோதகர் சமந்தி ரேணுகா தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
