ரஷ்யாவுக்கு தப்பி ஓடும் குற்றவாளிகளை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் சட்ட ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (26.11.2026) கைச்சாத்திடப்பட்டது.
இலங்கையின் சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க மற்றும் ரஷ்யாவின் சட்ட மா அதிபர் அலெக்சாண்டர் குட்சான் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
குற்றச் செயல்களின் மூலம் பெறப்பட்ட சொத்துக்கள்
இதன்படி, இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கண்டறிந்து மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ரஷ்யா உதவ இணக்கம் தெரிவித்துள்ளது.

மேலும், ரஷ்யாவில் உள்ள குறித்த நபர்களின் நிதிச் சொத்துக்கள் மற்றும் காணி, வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களைக் கண்டறிவதற்கும் உதவி வழங்கப்படும் என ரஷ்யா உறுதியளித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் இலங்கையின் குற்றச் செயல்களின் மூலம் பெறப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டத்தின் (Proceeds of Crime Act) விதிகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும்.