அசாத் மௌலானா விவகாரம் : அம்பலப்படுத்திய டக்ளஸ்
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முக்கிய விபரங்களை வெளியிட்ட அசாத் மௌலானாவின் தந்தை ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர் என்றும் அவர் உயிரிழந்த பின் அவரது மகன் என்ற ரீதியில், அவருக்கு மரமுந்திரை கூட்டுத்தாபனத்தில் வேலை பெற்றுக்கொடுத்தேன் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழில் இன்றையதினம்(30.09.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் ரீதியாக எம்மை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நப்பாசையில் அவ்வப்போது செய்திகளை வெளியிட்டு வருகின்ற பத்திரிகை தற்போதும் தவறான தகவல்களை வெளியிடுள்ளது.
பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ளவும் இல்லை, யாரும் எமது அலுவலகத்திற்கு வரவும் இல்லை.
சமூக மற்றும் கூட்டு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருட்தந்தை ரண்முனி ஜீட் வர்ணன் றொஹான் சில்வா என்பவர் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதாவது, அசாத் மௌலானா சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் சொல்லப்பட்ட விடயங்களின் உண்மைத் தன்மைமை உறுதிப்படுத்துமாறு குறித்த முறைப்பாட்டில் சொல்லப்பட்டு்ள்ளது.
அந்தவகையில், என்னுடன் தனக்கு தொடர்பு இருந்ததாக அசாத் மௌலானா சொல்லியிருந்தவை தொடர்பான எனது வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காகவே அழைக்கப்பட்டிருந்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்...
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri