டெல்லி கெபிடெல்ஸ் அணியின் புதிய தலைவர்
டெல்லி கெபிடெல்ஸ்(DC) அணியின் தலைவராக அக்சர் படேல்(Axar Pate) நியமிக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
18ஆவது ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அனைத்து அணிகளும் தங்களது அணித்தலைவரை நியமித்திருந்த நிலையில்,டெல்லி கேப்பிடல்ஸ் அணி மட்டும் அணித்தலைவரை நியமிக்காமல் இருந்தது.
அணியின் தலைவர்
டெல்லி அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அதனை நிராகரித்திருந்தார்.
A new era begins today 💙❤️ pic.twitter.com/9Yc4bBMSvt
— Delhi Capitals (@DelhiCapitals) March 14, 2025
இந்நிலையில் டெல்லி கெபிடெல்ஸ் அணியின் தலைவராக அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கேப்பிட்டல்ஸ் அணியை முன்னோக்கி வழிநடத்த நான் தயாராக உள்ளேன் என டெல்லி அணியின் அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.
டெல்லி கெபிடெல்ஸ் அணி
“டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவனாக இருப்பது எனக்கு மிகவும் பெருமையான தருணம்.
என் மீது நம்பிக்கை வைத்த எங்கள் உரிமையாளர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
நான் கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய காலத்தில் ஒரு முழுமையான கிரிக்கெட் வீரராக வளர்ந்துள்ளேன். மேலும் இந்த அணியை முன்னோக்கி வழிநடத்த நான் தயாராகவும் நம்பிக்கையுடன் உள்ளேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |