அணியின் தலைவர் பதவியை நிராகரித்துள்ள கே.எல் ராகுல்: வெளியான காரணம்
டெல்லி கேப்பிடல்ஸ்(DC) அணியின் தலைவர் பதவியை கே.எல் ராகுல்(K.L.Rahul) நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில், 9 அணிகள் தங்களது அணித்தலைவரை அறிவித்துள்ளன.
ஆனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி புதிய தலைவரை அறிவிக்காமல் உள்ளது.
டெல்லியின் அணித்தலைவர்
கடந்த டிசம்பர் மாதம் ஐபிஎல்லின் மெகா ஏலம் நடைபெற்றது. இதில் முக்கிய வீரர்கள் பலர் வேறு அணிகளால் வாங்கப்பட்டனர்.
குறிப்பாக ரிஷப் பண்ட், ஸ்ரேயஸ் ஐயர், கே.எல். ராகுல் என கடந்த சீசன்களில் அவர்கள் இருந்த அணிகளுக்கு தலைவராக இருந்த வீரர்களே வேறு அணியால் வாங்கப்பட்டனர்.
அந்த வகையில் லக்னோ அணியால் வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் அந்த அணிக்கு தலைவராகவும், கொல்கத்தாவில் இருந்து பஞ்சாப் சென்ற ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் அணிக்கு தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தான், டெல்லியால் 14 கோடிக்கு வாங்கப்பட்ட கே.எல்.ராகுல் தான் அந்த அணியின் தலைவராக இருப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், கே.எல்.ராகுல் தலைவர் பொறுப்பை நிராகரித்து உள்ளார்.
நிராகரித்த கேஎல் ராகுல்
நான் அணியில் ஒரு வீரராக இருக்க விரும்புகிறேன். அணித்தலைவர் பதவிதான் வேண்டும் என்று இல்லை. அணியில் ஓர் அங்கமாக இருந்தாலே போதும் ஒரு அணியில் இருக்கும் போது நாம் மகிழ்ச்சியாகவும், நாம் நல்ல சூழலில் இருக்கின்றோம் என்ற தோன்ற வேண்டும்.
அனைவரும் வெற்றிக்காக ஒருங்கிணைந்து பயணிக்கின்றோம் என்ற நினைப்பிருக்க வேண்டும்.அப்படி ஒரு அணி இருந்தால் எனக்கு போதும் என அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கே.எல்.ராகுல் ஏற்கனவே பஞ்சாப் மற்றும் லக்னோ அணியை வழி நடத்தியதால் டெல்லி அணி நிர்வாகம் அவரை அணித்தலைவராக்க விருப்பியது.
அணித்தலைவர் யார்
ஆனால் அவர் அதனை நிராகரித்துள்ளார். இதனால் டெல்லிஅணியின் அணித்தலைவர் யார் என்ற கேள்வி எழும்பி உள்ளது.
இந்த நிலையில், கே.எல்.ராகுல்அணித்தலைவர் பதவியை வேண்டாம் என கூறி இருப்பதால், சகலதுறை ஆட்டகாரர் அக்சர் பட்டேலை அணித்தலைவராக நியமிக்க டெல்லி அணி நிர்வாகம் யோசித்து வருவதாக கூறப்படுகின்றது.
அக்சர் படேலை ரூ. 18 கோடிக்கு டெல்லி அணி தக்கவைத்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |