பிள்ளையானும் - வியாழேந்திரனும் புதிய கூட்டணி
பொதுதேர்தலில் தோல்வியை சந்தித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனும் எதிர்வரும் காலங்களில் இடம்பெற உள்ள தேர்தல்களை மையமாக வைத்து கிழக்கு மாகாணத்தில் ஒன்றினைந்து போட்டியிட தீர்மானித்துள்ளனர்.
உள்ளூராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்ற பெயரில் இன்று (15.03.2025) குறித்த இரு தரப்புக்குமிடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் முற்போக்கு தமிழர் கழகத்தின் செயலாளர் ரோஸ்மண் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
பின்பு உள்ளூராட்சி தேர்தல்களில் வேட்பாளர்களின் பங்கீடு சம்பந்தமாகவும் இங்கு கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், எதிர்வரும் வாரங்களில் மேலும் பல கட்சிகள் இந்த கூட்டமைப்பின் கீழ் இணைய உள்ளதாகவும் இதன்போது தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |