சிறுபோக செய்கையில் இலை மடிச்சுக்கட்டியின் தாக்கம் தொடர்பில் விழிப்பூட்டல்
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கையில் இலை மடிச்சுக்கட்டியின் தாக்கம் சில பகுதிகளில் இனம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் சோதிலட்சுமி விஜயராசா தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் விவசாய திணைக்களத்தின் அறிவுறுத்தலை பின்பற்றி அதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
கிளிநொச்சி அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

யாழ் இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தர் ஓமந்தை விபத்தில் பலி - மனைவி உட்பட மூவர் அவசர சிகிச்சைப் பிரிவில்
இலை மடிச்சுக்கட்டி நோயின் தாக்கம்
மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் 10800 ஹெக்டேயர் அளவில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இலை மடிச்சுக்கட்டி நோயின் தாக்கத்தை அவதானித்திருக்கிருக்கிறோம்.
நெல் இலைகள் பச்சையம் அற்ற நிலையில் இலைசுருண்ட நிலையில் காணப்படும். அதனுள் புழு காணப்படும். அந்த புழுவானது இலைகளை மடித்து அதனுள் சுமார் 300 வரையான முட்டைகள் இட்டு 3 - 5 நாட்களில் புழு வெளியேறும்.
அந்த புழுவானது இலைகளைச்சுருட்டி 16 நாட்கள் வரை உயிர்வாழும். மஞ்சள், பச்சை நிறம் கலந்த புழுவாக காணப்படும். விவசாயிகள் வயல்களில் நிழல்களைத் தவிர்ப்பதோடு நைதரசன் உரப்பாவணையையும் குறைக்க வேண்டும்.
சிபாரிசு செய்யப்பட்ட இரசாயனங்களை பயன்படுத்த வேண்டும். விவசாய போதனாசிரியர்களின் அறிவுரைகளை பின்பற்றி பொருத்தமான கிருமி நாசினியை விசுறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலதிக தகவல் - யது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam
