தவறான முடிவெடுத்த தேசிய கல்விக் கல்லூரி மாணவி! கல்வி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை
வயம்ப தேசிய கல்விக் கல்லூரியில் மாணவியொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது.
இந்த விடயத்தை வயம்ப தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி லால் குமார ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வி அமைச்சு இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் எனக்கு அறிவிக்கப்பட்டது என கூறியுள்ளார்.
விசாரணை ஆரம்பம்
வயம்ப தேசிய கல்விக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் சமீபத்தில் தனது விடுதியில் வைத்து தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தர் ஓமந்தை விபத்தில் பலி - மனைவி உட்பட மூவர் அவசர சிகிச்சைப் பிரிவில்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
