அம்பாறை மாவட்ட நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நுகர்வோர் அதிகார சபையின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்முனை கமு/சாஹிரா (தேசிய பாடசாலையின்) காரியப்பர் மண்டபத்தில் உயர்தர மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி உயர்தர பிரிவு தலைவர் ஆசிரியர் எச்.எம்.ஏ றிபாய் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதன் போது நுகர்வோர் உரிமைகள், பொறுப்புகள், சட்டங்கள், பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் சம்மந்தமாக மாணவர்களுக்கு விளக்கக்காட்சி ஊடாக தெளிவுபடுத்தப்பட்டது.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பிரதான வளவாளராக அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரி இஷட்.எம் ஸாஜீத் புலன் விசாரணை அதிகாரி, எம்.எச்.எம். றிபாஜ், ஏ.பி.எம் காமீல் மற்றும் பிரதி அதிபர் மற்றும் பாடசாலையின் பகுதித் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.













Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
