திருகோணமலையில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் விழிப்புணர்வு கலந்துரையாடல்
திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் துறை சார் உத்தியோகத்தர்களுக்கான அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடல் இன்று (12)பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதலுக்கிணங்க இடம் பெற்ற குறித்த நிகழ்வில் வளவாளராக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட பிரதி பணிப்பாளர் கே.சுகுணதாஸ் கலந்து சிறப்பித்தார்.
கலந்துரையாடல்
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம சேவகர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமுதாய மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அனர்த்த காலங்களின் போது எவ்வகையான சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும், அதனை மக்கள் மத்தியில் எவ்வாறு கொண்டு செல்வது தொடர்பிலும் ஆபத்தை விளைவிக்க கூடிய அனர்த்தங்களின் போது முற்காப்பு நடவடிக்கைகள், அனர்த்தங்களின் போதான மற்றும் அதன் பின்னரான நடவடிக்கைகள் தொடர்பிலும் பல விடயங்கள் இதன் போது தெளிவூட்டப்பட்டன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்



