கொழும்பில் புதிய பொலிஸ் நிலையம் திறக்க தீர்மானம்
கொழும்பு - பொரளையின் வனாத்தமுல்லை பிரதேசத்தில் தனியான பொலிஸ் நிலையமொன்றைத் திறக்க பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தீர்மானித்துள்ளார்.
தீர்மானத்திற்கான காரணம்
வனாத்தமுல்லை பிரதேசத்தில் நடைபெறும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் வெகுவிரைவில் வனாத்தமுல்லையில் புதிய பொலிஸ் நிலையம் அமைக்கப்படவுள்ளதுடன், அதற்கான பொறுப்பதிகாரியும் நியமிக்கப்படவுள்ளார்.
புதிய பொலிஸ் நிலையம்
வனாத்தமுல்லை தொடர்மாடி அருகே குறித்த புதிய பொலிஸ் நிலையம் அமைக்கப்படுவதற்கான கட்டடம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன் வெகுவிரைவில் வனாத்தமுல்லை பிரதேசத்தில் விசேட அதிரடிப்படை முகாம் ஒன்றை நிறுவுவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




