அமைச்சரின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகளின் அசமந்தம்! எழுந்துள்ள குற்றச்சாட்டு
சுகாதார அமைச்சரின் தீர்மானங்களை அமைச்சின் அதிகாரிகள் நடைமுறைப்படுத்துவதில் தொய்வு நிலை காணப்படுவதாக அரச வைத்தியர் சங்கம் குற்றம்சாட்டுகின்றது.
நேற்று வைத்தியர்களின் இடமாற்றம் மற்றும் இதர காரணங்களை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவிருந்த நிலையில் நேற்று மாலை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடனான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றத்தினால் போராட்டம் கைவிடப்பட்டது.
இடமாற்றம் செய்யப்படாமல் 10,000 வைத்தியர்கள்
தரம் உயர்த்தப்பட்ட வைத்தியர்களின் இடமாற்றம் பெரும் சிக்கல் நிலையை உருவாக்கியுள்ளது. மேலும் வருடாந்த இடமாற்றம் செய்யப்படாமல் 10,000 வைத்தியர்கள் இருக்கின்றனர்.
இந்தநிலையில், குறித்த வைத்தியர்கள் சேவை செய்ய வேண்டிய வைத்தியசாலையில் இல்லை. இதனால் சில வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன என அரச வைத்தியர்கள் சங்கத்தின் பதில் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
வைத்தியர் சங்கம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
சுகாதார அமைச்சர் இணங்கிய விடயங்களை அமைச்சின் அதிகாரிகள் நடைமுறைப்படுத்துவதில் பின்வாங்குகின்றனர்.
நேற்று நாம், அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் பல பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வுகள் பெறப்பட்டன.
அவற்றை செயற்படுத்தாமல் அரச வைத்தியர்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளி அவர்கள் நாட்டை விட்டு செல்லும் மனோபாவத்தை ஏற்படுத்த அதிகாரிகள் முயற்சிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்



