யாழில் பெருந்தொகையான போதைப்பொருளுடன் இருவர் கைது!
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட அறுகுவெளி பகுதியில் பெருந்தொகையான கேரளகஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நேரடி வழிகாட்டலில், யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமகாவின் ஆலோசனைக்கு அமைய, போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்ட விஷேட தேடுதலின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சோதனை
அறுகுவெளி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இருவரிடம் மேற்கொண்ட சோதனையின் போது அவர்களுடைய உடைமையில் கேரள கஞ்சா இருந்தமை தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து அவர்கள் இருவரிடமும் மேற்கொண்ட மேலதிக விசாரணையில் அறுகுவெளி பகுதியில் பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 284 கிலோ 415 கிராம் நிறையுடைய 7 கோடி ரூபாய்கும் அதிகமான பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவரும் குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் யாழ் மாவட்டத்தில் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் எனவும், அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுவதுடன் சமூக செயற்பாட்டில் ஈடுபவதாக தன்னை போலியாக அடையாளப்படுத்தி வந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணைகளின் பின்னர் அவர்களை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல் - கஜிந்தன்
நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்



