“நயவஞ்சகர்-பொய்யர்” என்ற தம்மை விமர்சித்தவரை மன்னித்த, முக்கிய நாடு ஒன்றின் பிரதமர்!
அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் ”ஒரு நயவஞ்சகர் மற்றும் பொய்யர்” என்று கூறிய விடயம் சகிந்ததை அடுத்து, துணைப் பிரதமர் பெர்னபி ஜோய்ஸ், (Barnaby Joyc),பதவி விலக முன்வந்துள்ளார்.
துணை பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், லிபரல் கட்சியின் பணியாளர் ஒருவருக்கு பெர்னபி ஜோய்ஸ் அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்றே, தற்போது கசிந்துள்ளது.
இந்த குறுஞ்செய்தி கசிந்தமையை அடுத்து, அவர் பிரதமரிடம் மன்னிப்பை கோரியுள்ளார்.
அத்துடன் தமது பதவி விலகலையும் அவர் முன்வைத்துள்ளார்.
இதன்போது ஜோய்ஸின் மன்னிப்பை ஏற்ற மொரிசன், அவரின் பதவி விலகல் கோரிக்கை ஏற்க மறுத்துவிட்டார்
அத்துடன் “நம் அனைவருக்கும் பலவீனங்கள் உள்ளன. எங்களில் யாரும் சரியானவர்கள் அல்லர்”என்று குறிப்பிட்டுள்ளார்.




