அவுஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லின் புதிய சாதனை
T- 20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் பெற்ற அவுஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை கிளன் மேக்ஸ்வெல் படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று (23.2.2024) நடைபெற்ற போட்டியிலேயே அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியா அபார வெற்றி
நேற்றையப் போட்டியில் அடித்த ஒரு சிக்ஸருடன் அவர் T-20 போட்டிகளில் 126 சிக்ஸர்கள் பெற்றுள்ளார்.
இதன் மூலம் அதிக சிக்ஸர்கள் பெற்ற அவுஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை கிளன் மேக்ஸ்வெல் படைத்துள்ளார்.
அதிக சிக்ஸர்கள் அடித்த அவுஸ்திரேலிய வீரர்கள் வரிசையில்
கிளன் மேக்ஸ்வெல் - 126 சிக்ஸர்கள், ஆரோன் ஃபின்ச் - 125 சிக்ஸர்கள், டேவிட் வார்னர் - 113 சிக்ஸர்கள், ஷேன் வாட்சன் - 83 சிக்ஸர்கள், மிட்செல் மார்ஷ் - 66 சிக்ஸர்களைப் பெற்றுள்ளனர்.
போட்டியில் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் T-20 தொடரையும் 2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
