லொஸ் ஏஞ்சல்ஸில் படை அதிகாரியால் தாக்கப்பட்ட அவுஸ்திரேலிய பெண் ஊடகவியலாளர்!
லொஸ் ஏஞ்சல்ஸில் செய்தி வெளியிட்டு கொண்டிருந்த அவுஸ்திரேலிய பெண் ஊடகவியலாளர் ஒருவர் றப்பர் தோட்டாவால் தாக்கப்பட்டுள்ளார்.
அப்பகுதியில் இடம்பெற்று வரும் கலவரத்தின் போது செய்தி சேகரித்து கொண்டிருந்த காலில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த குறித்த பெண் ஊடகவியலாளரை அங்கு களமிறக்கப்பட்டிருந்த படை அதிகாரி ஒருவர் தாக்கியுள்ளார்.
இச்சம்பவம் பதிவான காணொளி வெளியாகியுள்ள நிலையில், அந்த பெண் காலில் அடிபட்டவுடன் துள்ளிக்குதிப்பதை காணொளியில் காணக்கூடியதாக உள்ளது.
துப்பாக்கிச் சூடு
கலிஃபோர்னியா நகரில் குடியேற்றத் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும், கொள்ளை சம்பவங்கள் நடந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேவேளை, பிரித்தானிய செய்தி புகைப்படக் கலைஞர் ஒருவரின் காலில் உயிருக்கு ஆபத்தான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Australian journalist hit by 'rubber bullet' while reporting from Los Angeles pic.twitter.com/HgEtBPcBBM
— Abdul Moiz (@AbdulMoiz594) June 9, 2025
இதன் விளைவாக குறித்த நபருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
